நேற்று இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப் பாடம் தொடர்பான வினாத்தாள்கள் கையளிக்கும் வேளையில் இரண்டு பரீட்சை நிலையங்களின் மாணவர்கள் சிலர் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி பத்தேகம கிறிஸ்தவ ஆண்கள் கல்லூரியின் பரீட்சை நிலையத்திலும் கம்பஹா தக்ஷிலா கல்லூரியின் பரீட்சை நிலையத்திலும் இது தொடர்பான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பத்தேகம கிறிஸ்தவ ஆண்கள் கல்லூரி பரீட்சை நிலையத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்களிடமிருந்து க.பொ.த உயர்தரப் பரீட்சையின் கலைப் பரீட்சைக்கான வினாத்தாள்களை குறித்த நேரத்திற்கு முன்னதாக பெற்றுக்கொண்டதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை, கம்பஹா தக்ஷிலா கல்லூரி பரீட்சை நிலையத்தின் இரண்டு மாணவர்களுக்கு கலை வினாத்தாளின் இரண்டாம் பாகம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் வலயக் கல்வி அலுவலகத்திலும் மாணவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

Von Admin