நகரமொன்றில் யாசகம் செய்து வாழ்ந்து வந்த யாசகர் ஒருவர் நேற்று (10) திடீரென உயிரிழந்துள்ளதுடன் அவரது காற்சட்டைப் பையில் இருந்து பெருந்தொகைப் பணம் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர் ஹக்மன பிரதேசத்தில் வசிக்கும் யாசகராவார். 

அவரது காற்சட்டையில் பல பைகள் இருந்ததுடன், அந்தப் பைகளில் சுமார் 400,000 ரூபா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தைச் ஹக்மன, கொங்கல பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான எஸ். விமலதாச என்ற யாசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் தான் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலுள்ள மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இறந்தவருக்கு உறவினர்கள் யாரும் இருப்பதாக தகவல் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அவர் தங்கியிருந்த அறையை காவல் துறை சோதனை செய்ததில் ஒரு சோடி காற்சட்டையில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பல ரகசியப் பைகளில் பணம் இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.