கனடாவில் மர்ம நபரிடம் சிக்கிய பெண்ணை பிரத்தானியா பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

அதாவது, பிரித்தானியாவிலும் கனடாவிலும் Durham என்ற பெயரில் பகுதிகள் இருக்கின்றன..

இந்நிலையில், கனடாவின் ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Durham பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் மர்ம நபர் ஊடுருவியுள்ளான்.

அப்பெண் தவறுதலாக, பிரித்தானியாவில் உள்ள Durham பொலிஸ் கட்டுப்பாட்டு அறையை ஆன்லைன் சாட்டில் தொடர்பு கொண்டுள்ளார்.

எனக்கு உதவி வேண்டும், வீட்டில் மர்ம நபர் ஊடுருவியுள்ளான் என அப்பெண் Durham பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஆன்லைன் சாட்டில் மேசேஜ் அனுப்பியுள்ளார்.

பின் அப்பெண்ணிடமிருந்து எந்தவித பதிலும் வராமல் இருந்துள்ளது.

பெண் தவறான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டதை உணர்ந்த பிரித்தானியா பொலிஸார், உடனே ஓண்டாரியோ மாகாண காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ம்பவயிடத்திற்கு விரைந்த ஓண்டாரியோ பொலிஸ், பெண்ணின் வீட்டிற்கு ஊடுருவிய நபரை கைது செய்துள்ளனர்.

தாக்கப்பட்டு கிடந்த பெண்ணுக்கு தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஓண்டாரியோ பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் மீது அத்துமீறி நுழைந்து, தாக்குதல் மற்றும் வலுக்கட்டாயமாக சிறைபிடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தக்க சமயத்தில் தகவல் தெரிவித்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய பிரித்தானியா அதிகாரிகளை அனைவரும் பாராட்டு வருகின்றனர்.