ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில், 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 102 கிராம் கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரும் ஊர்காவற்துறை பொலிஸாரும் இணைந்து இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.