உலக சந்தையை போன்று இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1,858.68 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதற்கமைய கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 45 டொலர் வரை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 124,500 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 115, 200 ரூபாயாக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்று பரவலை அடுத்து தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Von Admin