• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உக்ரைனில் உள்ள சுவிஸ் மக்கள் உடனடியாக பதிவு செய்ய அறிவுறுத்தல்

Feb 13, 2022

உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சுவிஸ் நிர்வாகம், சுவிஸ் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

உக்ரைன்- ரஷ்யா விவகாரம் நாளுக்கு நாள் இறுக்கமடைந்து வருகிறது. உக்ரைனில் உள்ள தங்கள் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர கெடு விதித்து வெளியேற அறிவுறுத்தியுள்ளது அமெரிக்கா.

பிரித்தானியாவும் இதே நிலைப்பாட்டை முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில் உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை சுவிஸ் நிர்வாகம் முன்வைத்துள்ளது.

இருப்பினும், நாட்டைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்படவில்லை எனவும், ஆனால் சுவிஸ் மக்கள் உடனடியாக உக்ரைனுக்கான சுவிஸ் தூதரகத்தில் தங்கள் தகவல்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதனால், வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டால் தொடர்புகொள்ள வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 2020ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் மொத்தம் 210 சுவிஸ் குடிமக்கள் உக்ரைனில் தங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உக்ரைனில் நிலவும் பதற்றத்திற்கு அமைதியான முறையில் தீர்வு காணுமாறு ரஷ்யாவை சுவிட்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது. மேலும், ஜெனீவாவில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் நடந்த இரண்டு சந்திப்புகள் இந்த விவகாரம் தொடர்பில் ஒரு தீர்வை எட்டத் தவறிவிட்டதாகவே கூறப்படுகிறது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஆயுதங்கள் துருப்புகள் என குவித்து வருவது, படையெடுப்புக்கான ஆயத்தமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளே பதற்றத்தை ஏற்படுத்துவதாக ரஷ்யா குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed