ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) தமிழ் பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். இந்நிலையில் அவர்களது திருமண அழைப்பிதழ் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆல்ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல் (Glenn Maxwell). ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் விளையாடிய அவரை அந்த அணி மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

அவர்களுக்கு இந்திய முறைப்படி 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் இடம்பெற்றிருந்த நிலையில் கொரோனா காரணமாக திருமணத்தை நடத்த முடியாதிருந்தது.

இந்நிலையில், தற்போது மார்ச் 27 ஆம் திகதி மேக்ஸ்வெல் – வினி ராமன் தம்பதிகளின் திருமணம் நடைபெற உள்ளது.

அவர்களது திருமண பத்திரிகை தமிழில் அச்சிடப்பட்டுள்ளதால் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் , ரசிகர்கள் தம்பதியினரை வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Von Admin