யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கல்வீச்சு தாக்குதலில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது.

கல்லால் எறிந்து பஸ்ஸை சேதமாக்கிய நபரை அங்கிருந்த இராணுவ வீரர் ஒருவர் மடக்கி பிடித்து , பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்