கண்டி நகரில் பேஸ்புக் விருந்தில் பங்கு கொண்ட 38 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் அழைப்பு மூலம் இவர்கள் மேற்படி விருந்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றையும் கண்டிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி விருந்திற்கு வருகை தந்தவர்கள் கண்டியைச் சூழ உள்ள பிரபல வர்த்தகர்களின் பிள்ளைகள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் சொகுசு வாகனங்களில் வந்தே மேற்படி விருந்தில் கலந்து கொண்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதில் 21 முதல் 24 வயதுடைய நான்கு யுவதிகளும் உள்ளடங்குவதாகத் தெரியவருகிறது. சந்தேக நபர்களை கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Von Admin