• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நெல்லியடி பகுதியில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்.

Feb 14, 2022

யாழ்.நெல்லியடி பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத கர்ப்பவதி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் மிதுனராஜா ரொபினா (வயது 28) என்ற 4 மாத கர்ப்பவதி பெண் குடும்ப தகராறு காரணமாக தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந் நிலையில் காப்பாற்றப்பட்டு கடந்த 6ம் திகதி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் 7 நாட்களின் பின் நேற்று காலை குறித்த கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed