ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை சிறி நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(16) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்றில் இருந்து தொடர்ந்தும் 15 தினங்கள் இவ்வாலய மஹோற்சவப் பெருவிழா இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 07 மணிக்கு பெரிய சப்பரத் திருவிழாவும், மார்ச் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு தேர்த் திருவிழாவும், அன்றைய தினம் இரவு நான்கு சாமப் பூசையுடன் மகா சிவராத்திரி உற்சவமும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

மறுநாள் புதன்கிழமை காலை 6 மணிக்கு கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவமும், அன்றையதினம், மாலை 06 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery

Von Admin