யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இருவர் டெங்கு காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

அராலி வீதி, ஆனைக்கோட்டையைச் சேர்ந்த வி்.அஜேய் என்ற வயது 11 எனும் சிறுவனும், 2ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கஜந்தினி யோகராசா எனும்18 வயது யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

டெங்கு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளையில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்களது மரணங்களின் பின்னர் யாழ். குடாநாட்டில் டெங்குக் காய்ச்சல் பரவல் அச்சமும் வெளிவந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கோவிட் 19 வைரஸ் தாக்கத்துடன் டெங்கு மற்றும் ஏனைய வைரஸ் நோய்களும் பரவி வருவதால், பொது மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Von Admin