மின் கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அல்லது மின் விநியோகத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வதில் கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

இதனால் அண்மைய நாட்களாக நாட்டின் பல பாகங்களில் மின் தடை ஏற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. எவ்வாறாயினும், நேற்றைய தினம் இந்த 40 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு கடன் அடிப்படையில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Von Admin