அவுஸ்திரேலியாவில் குடிவரவுச் சட்டத்திலுள்ள நன்னடத்தை சோதனையின் அடிப்படையில், அவுஸ்திரேலியர்கள் அல்லாதவர்களின் விசாவை நிராகரிக்கும் சட்டத்திருத்த வரைவுக்கு நாட்டின் கீழ்சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனையடுத்து இந்த சட்டத்திருத்தம், செனட் சபையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த திருத்தத்தின் அடிப்படையில் நாட்டிலுள்ள அவுஸ்திரேலிய குடியுரிமை இல்லாத ஒருவர், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய பாரதூரமான குற்றச்செயல் ஒன்றைப் புரிந்திருந்தால் அல்லது 12 மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனைக்கு உட்பட்ட நிலையில் அவர், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் எனக் கருதப்பட்டால், அவர் நாடு கடத்தப்படுவார்.

குறித்த விடயத்தில் பலரை நாடுகடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அதிக அதிகாரம் தேவைப்படுவதாக குடிவரவு அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் சட்டத்திருத்தத்துக்கு தொழிலாளர் கட்சியும் கீழ்சபையில் தமது ஆதரவை வழங்கியது.

இந்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது அவுஸ்திரேலிய வரலாற்றில் மிகவும் பாரதூரமான சட்டமாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Von Admin