யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளம் பெண்ணை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இக் கைது சம்பவத்தில் அரியாலை, பூம்புகார் பகுதியை சேர்ந்த 33 வயதான பெண்ணொருவரே ஹெரோயினுடன் சிக்கினார்.

பின்னர் சந்தேகம் ஏற்படாத விதத்தில் தனது 3 மாத கைக்குழந்தையுடன் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை (16-02-2022) யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அண்மையான பிரதேசத்தில் வைத்து அவர் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த கைது சம்பவத்தின்போது வேளை பெண்ணிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இதன் பெறுமதி 5 தொடக்கம் 6 இலட்சம் ரூபாவாகும். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் உள்ளூர் தரகர்கள் தொடர்பிலும் கொழும்பு முகவர்கள் தொர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்

Von Admin