• Mi. Nov 6th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தில் இனி இதற்கு கூடுதல் கட்டணம் வசூல்!

Feb 19, 2022

சுவிட்சர்லாந்தில் இனிவரும் நாட்களில் ரீப்ளே டிவிக்கு (replay TV) கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரீப்ளே டிவி என்பது நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, பயனர்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் அவற்றைப் பார்க்க அனுமதிக்கிறது, அதிலும் சப்ஸ்கிரைபர்களிடமிருந்து எந்தஒரு கூடுதல் கட்டணமும் வசூலிக்காமல் இந்த சேவை வழங்கப்படுகிறது.

இந்த ரீப்ளே டிவியில் உள்ள சிக்கல் என்னவென்றால், இது பார்வையாளர்களை நிகழ்ச்சிக்கு இடையே வரும் விளம்பரங்களை வேகமாக ஓட்டிவிட்டு இகழச்சியை மட்டும் பார்க்க அனுமதிக்கிறது.

இது ஒளிபரப்பாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் என்பதால், இழந்த விளம்பர வருவாயை திரும்பப் பெற, ஒளிபரப்பாளர்கள் டிவி பேக்கேஜ்களை விற்கும் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு அதிக கட்டணங்களை விதிக்கின்றன. இது இப்போது, விளம்பரங்களை ஸ்கிப் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தொழிற்துறை தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Tages-Anzeiger செய்தித்தாள் படி, சுவிட்சர்லாந்தில் நெட்ஒர்க் சேவையை வழங்கும் Init7 நிறுவனம் சமீபத்தில் ஒரு மாதத்திற்கு CHF 11 (சுவிஸ் பிராங்குகள்) கூடுதலாக வசூலிக்கத் தொடங்கியது.

Quickline and Salt நிறுவனமும் ரீப்ளே விருப்பத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நெட்ஒர்க் சேவை வழங்குநர்கள் Swisscom மற்றும் Sunrise UPC, „தற்போதைக்கு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எதுவும் மாறாது“ என்று கூறியுள்ளன.

Init7 முதலாளி Fredy Künzler, ரீப்ளே டிவியுடன் தொடர்புடைய ஒளிபரப்பாளர்களுக்கு தனது நிறுவனம் செலுத்த வேண்டிய பணம் ஒரு பயனருக்கு மாதத்திற்கு 2 சுவிஸ் பிராங்குகளாக இருக்கும் என்று கூறினார்.

இந்நிலையில், வரும் நாட்களில் சுவிட்சர்லாந்திலுள்ள அனைத்து நிறுவங்களும் Replay சேவைக்காக கூடுதல் கட்டணங்களை வசூலிக்கவுள்ளன. அதன்படி, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த கட்டணம் 7 சுவிஸ் பிராங்குகள் வரை உயர்ந்து மற்றும் 2026-ல் 8 சுவிஸ் பிராங்குகளாக உயரும் என கூறப்படுகிறது.

நெட்வொர்க் வழங்குநர்களுக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களுக்கும் இடையிலான தொழில்துறை அளவிலான ஒப்பந்தம் ஏப்ரல் அல்லது மே 2022-ல் மாற உள்ளது.

ஆனால், இறுதியில், ஒளிபரப்பாளர்கள் ரீப்ளே டிவிக்கு கட்டணம் வசூலிப்பது அல்லது விளம்பரங்களைப் பார்க்க மக்களை கட்டாயப்படுத்துவது அவர்களுக்கு நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும்.

வழக்கமான தொலைக்காட்சிக்கு பல மாற்று வழிகள் இருப்பதால், பார்வையாளர்கள் டியூன் அவுட் செய்யலாம் அல்லது முழுமையாக வெளியேறலாம்.

இது நடந்தால், கூடுதல் கட்டணங்கள் மூலம் பெறும் வருவாயை விட, வாடிக்கையாளர்களின் இழப்பால் இந்தத் துறை அதிக வருவாயை இழக்க நேரிடும் என கூறப்படுகிறது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed