யாழ்.புத்துார் சிறுப்பிட்டி – கலையொளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோல் குண்டும் வீசியும் தாக்குதல் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

வாகனம் ஒன்றில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வீட்டின் மீது பெற்றோல் குண்டையும் வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளது.

பின்னர் வீதி ஓரத்தில் வாள் ஒன்று மீட்கப்பட்டதுடன், சம்பவத்திற்கு தனிப்பட்ட பகையே காரணமாக இருக்கலாம். என கூறியுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். என தெரியவருகிறது.

Von Admin