பிரித்தானியாவில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை முதல் பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

அந்த வகையில், நேர்மறை சோதனை செய்தவர்களை சுயமாக தனிமைப்படுத்துவதற்கான சட்டத் தேவை கைவிடப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் கோவிட் தொற்று தொடர்பான இலவச ரேபிட்- ஆன்டிஜென் சோதனை முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும், இலவச ரேபிட் ஆன்டிஜென் சோதனை குறிப்பிட்ட பிரிவினரை இலக்காகக் கொண்டதாக இருக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளின் அர்த்தம், இப்போது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகி தனிப்பட்ட பொறுப்புக்கு செல்ல தயாராக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.  

Von Admin