• Mi. Sep 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் அமெரிக்கா நபரிடமும் கைவரிசை காட்டினர் திருடர்கள்

Feb 23, 2022

கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வவருகிறார், அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து கடந்த 19ஆம் திகதி சிறிய படகொன்றில் வந்துள்ளார்.

படகில் யாழ்ப்பாணம் வந்தவர் குருநகர் கடற்பகுதியில் தனது படகினை நிறுத்தி விட்டு , தங்குவதற்காக யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளார்.

விடுதியில் தங்கி விட்டு மறுநாள் படகுக்கு சென்ற போது, படகில் இருந்த சுழியோடி கண்ணாடிகள், பாதுகாப்பு அங்கிகள், கடல் ஆய்வு உபகரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதனை அவதானித்துள்ளார்.அது தொடர்பில் அவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed