ஹம்பாந்தோட்டை மீகஹஜதுர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (23) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீகஹஜதுர நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த சிறுமி மல்பெட்டாவ, அம்பலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த என தெரிவிக்கப்படுகின்றது.

டிப்பர் வாகன சாரதி கவனக்குறைவாக செலுத்தியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.