நெல்லியடியில் ஹண்டர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்கு முன்பாக இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. துன்னாலை கோயில் சந்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

ஹண்டரின் வாகனம் வேகமாகச் சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபுறத்தில் சென்ற வாகனத்துடன் மோதியதாக பொலிஸார் ஆரம்ப விசாரணையில் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.