பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பளை நகரப்பகுதியில் ஏ9 வீதியில் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

பளை நகரப்பகுதிக்கு அருகாமையில் இன்று (25) அதிகாலை 1.00மணியளவில் ஏ9 வீதியில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பொது மக்கள் அவதானித்துள்ளனர்.

உடனடியாக 1990 அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பு விடுத்து பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குறித்த நபர் இறந்து பல மணி நேரமாகி விட்டதாக கடமையில் உள்ள வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர் பளை முல்லையடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளந்திரையன் என்பவர் ஆவார்.

சடலம் தற்பொழுது பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin