இளவாலை காவல்துறை பிரிவில் வீட்டிலுள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை திருட்டில் ஈடுபட்டிருந்த மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் திருட்டு நகைகளை அடகு மற்றும் விற்பனை செய்து பணம் வழங்கி உதவினர் என்ற குற்றச்சாட்டில் தந்தையும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்சேன்துறை வறுத்தவிளான் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் 53 வயதுடைய தந்தையும் 36 வயதுடைய மகளும் கைது செய்யப்பட்டனர்.

இளவாலை காவல்துறை பிரிவில் அண்மைக்காலமாக பட்டப்பகலில் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் வேளையில் வீடுடைத்து திருட்டுச் சம்பவங்கள் ஏழுக்கு மேற்பட்டன இடம்பெற்றன.

அவை தொடர்பில் இளவாலை காவல்நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. அவை தொடர்பில் காங்கேசன்துறை மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.