மார்ச் மாதம், சுவிட்சர்லாந்தில் பல மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது.

அவை என்னென்ன மாற்றங்கள் என்று பார்க்கலாம்…

வசந்த காலம் துவங்குகிறது

மார்ச் 20 முதல் சுவிட்சர்லாந்தில் வசந்த காலம் துவங்க உள்ளது. அது, ஜூன் 21 வரை நீடிக்க உள்ளது. அதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் கோடைக்காலம்!

Daylight saving time துவக்கம்

மார்ச் 27, ஞாயிற்றுக்கிழமை காலை 2.00 மணிக்கு Daylight saving time துவங்க உள்ளது. அப்போதிலிருந்து கடிகார முட்கள் ஒரு மணி நேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். மாலையில் நீண்ட நேரம் வரை வெயில் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த மாற்றம் பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த மாற்றம் அக்டோபர் 31, காலை 3.00 மணியுடன் முடிவுக்கு வரும்.

மீதமுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வர உள்ளன

பிப்ரவரி 17 அன்றுடன் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் சுவிட்சர்லாந்தில் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்துதல், மற்றும், பொதுப்போக்குவரத்திலும், மருத்துவமனைகள் முதலான இடங்களிலும் மாஸ்க் அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் மட்டும் இன்னமும் தொடர்கின்றன.

அவையும், மார்ச் மாத இறுதியில் முடிவுக்குக் கொண்டு வரப்படும், ‘ எதிர்பார்ப்பது போலவே கொரோனா சூழலில் முன்னேற்றம் காணப்பட்டால்’ என்று கூறியுள்ளது பெடரல் கவுன்சில்!

சுவிட்சர்லாந்திலுள்ள பெரும்பாலான பனிச்சறுக்கு மையங்கள் ஏப்ரல், மே வரை கூட திறந்திருக்கும் நிலையில், First (Grindelwald), Madrisa (Davos Klosters), Evolène (Valais) முதலான சில மட்டும் மார்ச் இறுதியுடன் மூடப்பட உள்ளன.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் நேரம்

மார்ச் மாதத்தைப் பொருத்தவரை பலருக்கு பிடிக்காத ஒரு மாதமாக அது இருக்கக்கூடும். ஆனால், யாரும் அதிலிருந்து தப்ப முடியாது.

மார்ச் 31, பெரும்பாலானோர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கடைசி நாள் ஆகும்.  

Von Admin