யாழ். நாவற்குழி மற்றும் கெற்பேலி பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவற்குழி தெற்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதான சுவின்சன் என்ற இளைஞன் கை மற்றும் முதுகுப் பகுதிகளில் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெற்பேலி மத்திப் பகுதியில் இடம்பெற்ற வெட்டுச் சம்பவத்தில் 36 வயதான கோணேஸ்வரன் என்ற நபர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு அசம்பாவிதங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் சாவகச்சேரி மற்றும் கொடிகாமப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Von Admin