நிகவெரட்டிய பிரதான கால்வாய்க்குள் வீழ்ந்து ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிகவெரட்டிய பிரதான கால்வாயை அண்மித்த புதுமுத்தாவ பிரதேசத்தில் வசித்து வந்த ஜலீல் ஹைஷான் எனும் 2 வயதும் 8 மாதமும் உடைய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தந்தை நிகவெரட்டிய பிரதேசத்தில் வர்த்தக நிலையமொன்றில் பணிபுரிந்து வருவதுடன், தாயும் பிள்ளையும் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், குழந்தையின் தாய் பிரதான கால்வாய்க்குச் சென்று துணிகளை துவைத்த காயவைத்து விட்டு பின் குழந்தையை தேடியுள்ளார்.

இதன்போது குழந்தையின் நடமாட்டம் இல்லாததை அடுத்து, பதற்றத்துடன் அங்குமிங்குமாக தேடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையின் தாயின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வருகை தந்த சிலர், பிரதான கால்வாய் பகுதியில் குழந்தையை தேடிப்பார்த்துள்ளனர்.

இதன்போது, குறித்த குழந்தையின் உடல் பிரதான கால்வாய் ஓரமாக மிதந்து கொண்டிருப்பதை அவதானித்த மக்கள் அக்குழந்தையை மீட்டு உடனடியாக நிகவெரட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அந்த குழந்தை ஏற்கனவே உயரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நிகவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin