எழுத்துத்துறையில் ஆர்வம் மிகுந்து பல சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் ‘குகதா’ எனும் புனைபெயரில் எழுதி வரும் டக்ஸனா எனும் கிளிநொச்சி மாணவி தமிழ்நாடு அரசின் குறிஞ்சிக் கவிமலர் விருதைப் பெற்றுள்ளார்.

குகதா எனும் புனைபெயரில் இலங்கை பத்திரிகைகளிலும், இந்திய வார இதழ்களிலும் பிரான்ஸிலிருந்து வெளிவரும் தமிழ் நெஞ்சம் இதழ் மற்றும் தொகுப்பு நூல்களிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை(மார்ச் 1) முன்னிட்டு மக்கள் சேவகர் தளபதியின் பொற்கால விருதுகள் -2022க்கான விண்ணப்பத்தில் தகுதி பெற்று இலங்கை சார்பாக குறிஞ்சிக் கவிமலர் விருதினை டக்ஸனா பெற்றுள்ளார்.

இவர் கிளிநொச்சியைச் சேர்ந்த கிருஷ்ணானந்தன் – ஜெகதீஸ்வரி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியாவார். இந்நிலையில் தமிழ் நாட்டின் விருது பெற்ற கிளிநொச்சி மாணவிக்கு பல்லரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.