நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீற்றர் வரையில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தாழமுக்கப் பிரதேசம் ஒன்று தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அதற்கு அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது.

இது நாளை முதல் எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்து நகரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.