யாழ்.ஊர்காவற்றுறை – சுருவில் கடலில் மூழ்கி நேற்றய தினம் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை – விமலகுமார் (வயது61) என்பவரே உயிரிழந்துள்ளார். காலை கடன்களுக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டிருந்த குறித்த நபர் பின்னர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

சடலத்தை மீட்டுள்ள பொலிஸார் அதனை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.