கிழக்கு மெக்சிகோவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று வியாழக்கிழமை (03-03-2022) நிகழ்ந்துள்ளது.

இதேவேளை, நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை ஒலி மெக்சிகோ நகரம் முழுவதும் எழுப்பப்பட்டது.

இதுதொடர்பில் கூறிய தேசிய நிலஅதிர்வு மையம் வெராகுரூஸ் பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் 113 கிலோமீட்டர் ஆழம் கொண்டது என்று தெரிவித்துள்ளது.

மேலும், மெக்சிகோவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக பசிபிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் அடிக்கடி ஏற்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் கடுமையான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று மெக்சிகோ நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் கூறினார்.

Von Admin