சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களை தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கக் கோரி முன்வைக்கப்பட்ட முன்மொழிவு (Proposal) ஒன்றை சுவிஸ் அமைப்பு ஒன்று நிராகரித்துவிட்டது.

சுவிட்சர்லாந்தின் கிரீன்ஸ் கட்சியினர், ஐந்து ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர்களை தேர்தலில் வாக்களிக்க அனுமதியளிக்கக் கோரி முன்மொழிவு ஒன்றை முன்வைத்தார்கள்.

ஆனால், 17க்கு 8 என்ற வாக்கு வித்தியாசத்தில் அந்த முன்மொழிவு தோல்வியடைந்துவிட்டது.

அந்த முன்மொழிவை எதிர்ப்போர், அப்படி வெளிநாட்டவர்கள் வாக்களிக்க விரும்பினால், அவர்கள் முதலில் சுவிஸ் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கட்டும் என்று கூறியுள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தில் சுமார் 25 சதவிகிதம் மட்டுமே வெளிநாட்டவர்கள் உள்ள நிலையிலும், சுவிட்சர்லாந்து சுவிஸ் குடிமக்களுக்கு மட்டுமே வாக்களிக்க அனுமதியளித்துள்ளது.

இதற்கிடையில், சுவிஸ் குடியுரிமை பெறுவது எவ்வளவு கடினமான விடயம் என்பதை நம்மில் பலரும் அறிந்திருப்போம்.

சில சுவிஸ் மாகாணங்கள் மட்டுமே, அபூர்வமாக, அதுவும் மாகாண அல்லது நகராட்சி அளவில் மட்டுமே வாக்களிக்க வெளிநாட்டவர்களுக்கு அனுமதியளிக்கின்றன.

இந்த முன்மொழிவை நிராகரித்தது, தேசிய கவுன்சிலின் மாகாண அரசியல் ஆணையம் என்னும் அமைப்பாகும்.