உக்ரைன் ரஷ்ய யுத்தம் ஆரம்பமானதன் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோத பிரச்சாரங்களை தடை செய்யும் முகமாக Face book எனப்படும் முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்றவற்றை ரஷ்யா முற்றாக தடைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனேவே ரஷ்ய அதிபர் புடின் தவறான செய்திகளை பரிமாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா டுடே, ஸ்புட்னிக் மற்றும் ஆர்டிக் போன்ற ரஷ்யன் வலைத்தளங்களும் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளமையால் புடின் ரஷ்யாவில் மேற்படி சமூக வலைத்தளங்களை ரஷ்யாவில் முடக்கியிருக்கக் கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

Von Admin