இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வந்த பெண் பயணியொருவர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவின் அதிகாரிகள், கொழும்பில் இருந்து வந்த ஒரு பயணியை இரகசிய தகவலின் அடிப்படையில் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அந்த பெண்ணிடம் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட போது, காலணியின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 தங்க வெட்டு துண்டுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இது 393 கிராம் தங்கம் என அளவிடப்பட்டுள்ளது.  

Von Admin