• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

எரிபொருள் தட்டுப்பாடு – இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குரவத்து சங்கம் கோரிக்கை

Mrz 7, 2022

தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்காவிட்டால் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் இருந்து ஒதுங்கிக்கொள்வோம் என இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குரவத்து சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாணவர் போக்கவருத்து சேவை சங்கத்தின் தலைவர் குறிப்பிடுகையில்,

மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச்செல்ல பாடசாலை சேவையை மேற்கொள்ளும் வாகனங்களுக்கு டீசல் இல்லாத பிரச்சினை இருந்து வருகின்றது. அதனால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எமது வாகனங்களுக்கும் எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என போக்குவரத்து அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவைக்காக தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு இலங்கை போக்குவரத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை நிரப்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று பாடசாலை சேவையை மேற்கொள்ளும் வானங்களுக்கும் அந்த அனுமதியை வழங்குமாறு கேட்டிருந்தோம். இன்று வரை எந்த பதிலும் எமக்கு கிடைக்கவில்லை. அவ்வாறு அனுமதி கிடைக்காவிட்டால் நாங்கள் பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை மேற்கொள்ளமாட்டோம். ஏனெனில் எரிபொருளுக்காக நீண்ட நேரம் வரிசையில் இருந்துவிட்டு மாணவர்களை உரிய நேரத்துக்கு அழைத்துச்செல்வது சாத்தியமில்லை.

அத்துடன் இந்த கோரிக்கையை நாங்கள் சில தினங்களுக்கு முன்பே போக்குரவத்து அமைச்சருக்கு அறிவித்தோம். என்றாலும் தற்போது புதிய ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அமைச்சர்கள் மாறுவதால் இந்த பிரச்சினைக்கு திரைவாக தீர்வுகாண முடியாது. புதிய அமைச்சர் தற்போது ஆரம்பத்தில் இருந்து எமது கோரிக்கைகளை பரிசீலனை செய்யவேண்டும். அதன் பின்பே முடிவுக்கு வருவார். அதனால் இந்த விடயத்தில் கல்வி அமைச்சர் தலையிட்டாவது எமக்கு தீர்வை பெற்றுத்தரவேண்டும் என்றார்.

இதேவேளை, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிடுகையில்

இறங்குமதிக்காக கோரப்பட்ட எரிபொருள் அடங்கிய கப்பல்கள் ஒரே நேரத்தில் துறைமுகத்துக்கு வந்ததால் சற்று நெருக்கடி ஏற்பட்டது. தற்போது அந்த நிலைமை சரிசெய்யப்பட்டிருக்கின்றது. டீசல் முத்துராஜவலையில் இறக்கிக்கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் இரண்டு தினங்களில் எந்த குறைப்பாடு இல்லாமல் அனைத்துவகையான எரிபொருள்களும் மக்களுக்கு கிடைப்பதற்கு வழி  செய்வோம் என்றார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed