கடந்த திங்கட்கிழமை (28.0202022) சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தில் , காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முல்லைத்தீவு இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த இளஞர் கடந்த வரும் செப்ரெம்பர் மாதமளவில் யாழ் யுவதி ஒருவரை திருமணம் செய்து சுவிட்சர்லாந்துக்கு அழைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முல்லைத்தீவு இளைஞர் தற்போது தகனம் செய்யப்பட்டுள்ளதாக பேர்ன் மாநில தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை யாழ் யுவதி சுவிட்சர்லாந்து வந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் , இப்படி ஒரு சோகம் நேர்ந்துள்ளது .

மேலும் குறித்த யுவதி அங்கு சென்று சிறிது மதங்களாவதனால் அவருக்கு சுவிஸ் மொழி மற்றும் இடங்கள் பெரிதும் பழக்கப்படாதவர் எனவும் அங்குள்ளவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.   

Von Admin