யாழ்.புத்துார் – நவக்கிரி பகுதியில் பூப்புனித நீராட்டு விழாவில் 14 பவுண் நகைகள் மற்றும் 2500 பவுண்ஸ் வெளிநாட்டு பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், பிரத்தியேகமான இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 12 பவுன் தாலி உட்பட 2 பவுண் சங்கிலி மற்றும் பெருமளவு வெளிநாட்டு பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

திருடப்பட்ட நகையின் பெறுமதி 15 இலட்சம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.