• Mi. Sep 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் திடீரென அதிகரித்த முட்டை விலை!

Mrz 8, 2022

இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதிகரித்துள்ளது. வரலாற்றில் முட்டைக்கு இவ்வாறு விலை கூடியுள்ளமை இதுவே முதல் தடவை. பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது முட்டையின் விலையும் அதிகரித்துள்ளது.

கோழி தீவனங்களுக்கான விலை அதிகரிப்பே முட்டையின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளமைக்கு பிரதான காரணம் என அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கோழிப் பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

முன்னர் 3,200 ரூபாவுக்கு கிடைத்த முட்டைத் தீன் (கோழிகளுக்கு முட்டையிடும் பருவத்தில் வழங்கப்படும் தீன்) தற்போது 6,800 ரூபாவுக்கு விற்கப்படுவதாக தாஹிர் தெரிவிக்கின்றார்.

கோழி தீவனத்துக்குரிய பிரதான உள்ளீடுகளில் ஒன்றான சோளத்துக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், முன்னர் 65 ரூபாவுக்குக் கிடைத்த ஒரு கிலோ சோளம், தற்போது 125 ரூபா வரையில் விற்பனையாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed