கையடக்க தொலைபேசியை திருடியதாக,  இளைஞர்களினால் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக  காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் திருகோணமலை மூதூர் காவல் துறை  பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவபாலன் சத்தியபவான் (44வயது) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குறித்த நபர் தனது சித்தியுடன் கங்குவேலி பகுதியில் வசித்து வருகின்ற நிலையில் மதுவுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற இளைஞர் அந்த நபரை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நபர் வீடு திரும்பிய நிலையில், தனக்கு மயக்க நிலை ஏற்பட்டுள்ளதுடன், தலைப்பகுதியில் விரைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட வைத்திய நிபுணரின் சோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  காவல் துறையினர் தெரிவித்த்துள்ளனர்.

குறித்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் காவல் துறையினர் தெரிவித்தனர்.