• Di. Dez 10th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கேரளாவில் பச்சிளம் குழந்தை உட்பட ஐவர் பரிதாப மரணம்

Mrz 8, 2022

இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் தளவபுரம் வர்கலா நகரை சேர்ந்தவர் பிரதாபன் (வயது 62). இவர் அப்பகுதியில் உள்ள புத்தன் சந்தையில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

பிரதாபன் தனது மனைவி செர்லி (வயது 54), மூத்த மகன் அகில் (வயது 26), மருமகள் அபிராமி (வயுது 24) மற்றும் பெயர் வைக்காத 8 மாத பெண் குழந்தை ஆகியோருடன் வர்கலா நகரில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தங்களுக்கு சொந்தமான வீட்டில் 2வது மாடியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரதாபன் வீட்டில் இருந்து இன்று அதிகாலை 1.45 மணி அளவில் கரும்புகை வெளியேறியது.

வீட்டுக்குள் தீ எரிந்து கொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து பொலிசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் விவரம் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்த பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பிரதாபன் அவரது மனைவி செர்லி, மகன் அகில், மருமகள் அபிராமி மற்றும் 8 மாத பச்சிளம் குழந்தை என 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டிற்கு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து மின்கசிவு ஏற்பட்டு இருக்குமா என பரிசோதனை செய்தார்கள். ஆனால் மின் கசிவுக்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லை என தெரிய வந்தது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேல் விசாரணை செய்து வருகிறார்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed