2022 ஆம் ஆண்டின் சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் விருதுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வளர்ந்து வரும் இளம் அழக்கலை ஒப்பனையாளர், மதுமி தயாபரன் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கபடவுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட மதுமி தயாபரன் Beauty care-யின் உரிமையாளரான இவர் தொழிற் தகைமையுடன் கூடிய திறமையான உழைப்பால் உயர்ந்து தனக்கான ஓர் தனி தடம் பதித்தவர்.

தன்னை மிக நிதானமாக வளர்த்து வரும் இவரின் வெற்றி பயணத்தினை பாராட்டி கெளரவிப்பதுடன் இவரது திறமைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, சிறந்த வளர்ந்து வரும் இளம் ஒப்பனையாளருக்கான விருதினை வழங்கி கெளரவிக்க இருப்பதில், அகில இலங்கை தமிழ் அழகு சிகிச்சை நிபுணர்கள் சம்மேளனம் மகிழ்வு கொள்கிறதாக தெரிவித்துள்ளது.