• Do.. Feb. 13th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புத்தூர் மேற்கு பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவனும், மனைவியும்

März 10, 2022

யாழில் மின்சாரம் தாக்கி கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

புத்தூர் மேற்கு பகுதியில் இன்று இந்த துயரச்சம்பவம் நடந்தது.

மாசிலாமணி சிவப்பிரகாசம் (59), சிவப்பிரகாசம் நகுலா (55) ஆகியோரே உயிரிழந்தனர்.

இன்று மதியவேளை வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது.

அதனை சரிசெய்த பின்னர் மனைவி அதற்கு அருகில் உள்ள கிணற்று தொட்டியிலே நீராடிக் கொண்டிருந்தபோது மின்சார விபத்து ஏற்பட்டு மனைவி மீது மின்சாரம் பாய்ந்தது மனைவியைக் காப்பாற்றுவதற்காக கணவன் ஓடிச் சென்ற நிலையில் இவருக்கும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தம்பதியினருக்கு ஒரு மகள் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.

இருப்பினும் இவர்கள் உயிரிழந்தது அயலவர்களுக்குத் தெரியாத நிலையில் பல்கழைக்கழகம் சென்று வீடு திரும்பிய மகள் பெற்றோரைத் தேடியபோது இருவரும் கிணற்றுக்கு பக்கத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed