யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம்  வியாழக்கிழமை (10-03-2022) காலை யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவம், வீதியை கடக்க முற்பட்டவேளை காரைநகரில் இருந்து யாழ்.நோக்கி சென்ற கப் ரக வாகனம் மோதியதினாலே இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்து சம்பத்தில் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக பதுளையில் இருந்து யாழிற்கு வந்திருந்த 61 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவரது சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin