யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரௌடிக்குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில், தாவடிபகுதிய சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு நேற்று இரவு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல வாள்வெட்டு, வீடுகளை சேதமாக்குவது போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரென கூறப்படுகின்றது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த நிலையில், தலைமறைவாக இருந்த இளைஞன், நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.