வடமராட்சி மந்திகை மாலுசந்திக்கு அண்மித்த பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும், நெல்லியடி நோக்கி சென்று கொண்டிருந்த உந்துருளியும்( மோட்டார் சைக்கிள்) மோதிக்கொண்டதில் ஐவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ஒருவர் உந்துருளியில் (மோட்டார் சைக்கிளில்) தனது இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையிலிருந்து ஏற்றிச் சென்ற போதே முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மூவருடன் சேர்த்து ஆறு பேர் விபத்துக்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin