யாழில்    மண்ணெண்ணெய் வாங்கி தருவதாக கூறி வயோதிப பெண்ணிடம் 1000 ரூபாய் பணத்தை சுருட்டிய நபர் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருகையில்,

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வயோதிப பெண் ஒருவர் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் நின்றுள்ளார்.

இதன்போது அங்குவந்த இளைஞன் ஒருவர் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. உடனடியாக மண்ணெண்ணெய் வாங்கி தருவதாக கூறி வயோதிப பெண்ணிடம் 1000 ரூபாய் பணத்தையும், போத்தலையும் வாங்கிக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து நீண்ட நேரமாக மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த பெண் ஏமாற்றத்துடன் அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறிவிட்டு சென்றிருக்கின்றார். 

Von Admin