யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன் மேற்கு பகுதியில் பெண் ஒருவர் 240 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

கைதான சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றவருவதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.