யாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் மின்கம்பத்தில் வேன் மோதி விபத்துக்குள்ளானது.

எனினும் இந்த சம்பவத்தில் சாரதிக்கு காயம் ஏற்படவில்லை. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பொறியியலாளர் பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று மதியம் குறித்த பொறியியலாளர் வீட்டில் இறக்கி விடப்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனின் டயர்கள் பலவீனமாக இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin