பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (13.03.2022).மாலை 04.30மணியவில் இடம்பெற்றதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவன் பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பாரதிதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த மாணவன் பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டியினை கண்டு களித்து விட்டு வீடு திரும்பியிருந்தார்.

எனினும் மாணவனை நீண்ட நேரம் காணவில்லை என உறவினர்கள தேடிய நிலையில் மரக்கறி தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக கிடப்பதை மாணவனின் உறவினர்கள் இனங்கண்டதை அடுத்து சடலம் மீட்கப்பட்டு பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாணவனின் உதட்டுபகுதியில் காயங்கள் கானப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   

Von Admin