• Mi.. März 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி! மாணவன் உயிருடன் இல்லை

März 14, 2022

யாழில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் பெறுபேறுகளை பெறுவதற்கு உயிரிருடன் இல்லை என்பது பெரும் துயரமாக மாறியுள்ளது. 

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 இல் கல்வி பயின்ற வ.அஜய் என்ற மாணவன் அண்மையில் உயிரிழந்தார். டெங்கு நோய் தொற்று காரணமாக குறித்த மாணவன் உயிரிழந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டுக்கான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றிரவு வெளியானது. இதில் குறித்த 155 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார். யாழ். மாவட்ட வெட்டப்புள்ளி 148 என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாணவன் டெங்கு நோயினால் உயிரிழந்த தினத்தன்று அவர் பரீட்சையில் சித்தியடைவார் என அவரது ஆசிரியர் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed