கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட சர்வதேச விமான பயணம் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் வரும் 18 ஆம் திகதி முதல் ரத்து செய்வதாக பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது, பிரிட்டனுக்குள் வரும் சர்வேதச பயணிகள் கொரோனா பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், எங்கிருந்து வந்தார்கள், எங்கு தங்குவார்கள் உள்ளிட்ட அவர்களின் பயண திட்டத்தின் தகவல்களும் பெறப்படுகின்றன.

இந்நிலையில், வரும் 18 ஆம் திகதி முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சர்வதேச பயணிகளும் கூட கட்டுப்பாடுகள் இன்றி பிரட்டனுக்குள் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் மாதத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்படுவதால், மக்கள் விடுமுறை கால பயண திட்டங்களை சிரமமின்றி மேற்கொள்ள இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் (Sajid Javid) தெரிவித்தார்.

Von Admin